ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவி ஜி.ஹரிணிக்கு பாராட்டி பரிசளித்து கெளரவிக்கப்பட்டார்.
ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் ஜி.ஹரிணி. பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ பயின்ற ஜி.ஹரிணி 600 க்கு 592 மதிப்பெண் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கேஆர்என்.ராஜேஸ்குமார் மாணவியை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசளித்து கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளர் சிவசேகரன், துணை அமைப்பாளர் பொன்னுசாமி, கூனவேலம்பட்டிபுதூர் கிளை செயலாளர் மா. சரவணன், ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்: அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., பாராட்டு
RELATED ARTICLES