பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ராசிபுரம் ஸ்ரீவித்யமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இப்பள்ளியின் மாணவர் எஸ்.எஸ்.தரணீஸ் 500-க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. இப்பள்ளி மாணவி எஸ்.ஏ.மிருனா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவரது பாடவாரியான மதிப்பெண்கள்: தமிழ்-94, ஆங்கிலம்-97, கணிதம்-99, அறிவியல்-100, சமூக அறிவியல்-99. இதே போல் பள்ளி மாணவி வி.ரோஷினி 487 மதிப்பெண் பெற்றுள்ளார். இவரின் பாடவாரி மதிப்பெண்கள்: தமிழ்-96, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-94. இப்பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியில் 450-க்கும் மேல் 29 பேரும், 400-க்கும் மேல் 44 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியில் கணிதம், அறிவியல் பாடங்களில் தலா இருவரும்,சமூக அறிவியலில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.

சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பள்ளியின் தலைவர் டாக்டர் சி.நடராஜூ, செயலர் வி.சுந்தரராஜன், பொருளாளர் வி.ராமதாஸ், பள்ளி சேர்மேன் என்.மாணிக்கம், துணைத் தலைவர்கள் எம்.ராமகிருஷ்ணன், கே.குமாரசாமி, இணைச்செயலர் வி.பாலகிருஷ்ணன், நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.எம்.கிருஷ்ணன், இயக்குனர் ஆர்.பெத்தண்ணன், அறக்கட்டளை செயலர் எஸ்.சந்திரசேகரன், மெட்ரிக் பள்ளியின் முதல்வர் பி.கிருஷ்ணமூர்த்தி, 10-ம் வகுப்பு பொறுப்பாசிரியர் எஸ்.வெண்ணிலா உள்ளிட்டோர் வாழ்த்தி தெரிவித்தனர். சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்கள் பள்ளி வளாகத்தில் பெற்றோர் முன்னிலையில் பாராட்டு நினைவு பரிசளித்து கெளரவிக்கப்பட்டனர். மேலும் கேக் வெட்டி கொண்டாடினர்.