சிபிஎஸ்சி 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பாவை வித்யாஸ்ரம் பள்ளியின் மாணவ மாணவியர் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். ராசிபுரம் அருகேயுள்ள புதுச்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் பாவை வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனைப் புரிந்துள்ளனர்.

பள்ளியில் பத்தாம் வகுப்பில் மாணவி சஞ்சிதா கண்ணன் 500 -க்கு 490 மதிப்பெண்கள்களும், 12-ம் வகுப்பில் மாணவி எஸ்.நிதர்சனா 500 -க்கு 492 மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றனர். மேலும் இம்மாணவி எஸ்.நிதர்சனா ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு- 2025-ல் 99.9 சதவீதம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 32 மாணவ, மாணவியர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.இப்பள்ளி மாணவ மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதுடன், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிவது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச தரம் வாய்ந்த முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் , ஆய்வகங்கள், மாணவ மாணவியர் விடுதிகள், உள் விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம், ஆடிட்டோரியம் ஆகிய அனைத்து நவீன வசதிகளுடன் அமைந்துள்ள பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் தரப்படுகின்றது. பரந்து விரிந்த விளையாட்டு மைதானங்கள் கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கு மிகச்சிறந்த தளங்களை கொண்டுள்ள பள்ளிகள் விளையாட்டிலும் முத்திரை பதித்து வருகின்றன.
சிறந்த போட்டித் தேர்வு நிறுவனமான ஆகாஷ் எஜீகேசனல் சர்வீசஸ் லிமிடெட் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு நீட், ஐஐடி -ஜே.இ.இ. ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு மிகச்சிறந்த பயிற்சியினை அளித்து மாணவ, மாணவிகளின் மருத்துவம் மற்றும் பொறியியல் கனவினை நிஜமாக்குவதோடு, புகழ்பெற்ற நிறுவனங்களில் இளம் பட்டப்படிப்பு முதல் உயர் ஆராய்ச்சிக் கல்வி (பிஎச்டி) வரை முழு ஸ்காலர்ஷிப் உதவித்தொகையுடன் படிக்க வழிவகுப்பதும் இப்பள்ளிகளின் பாராட்டுதலுக்குரிய அம்சமாகும்.
சாதனை மாணவர்களை உருவாக்கிய பாவை பள்ளிகளின் இயக்குநர் சதீஸ், முதல்வர் ரோஹித் உள்ளிட்ட ஆசிரியர் குழுவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என். வி. நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.ராமசாமி, இயக்குநர் (சேர்க்கை) வழக்கறிஞர் கே.செந்தில் மற்றும் பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டினர்.