ராசிபுரம் ராசி இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ சீனியர் செகண்டரி பள்ளி மாணவ மாணவியர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளில் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வில் ஹெச். ஜஸ்லின் 500-க்கு 487 மதிப்பெண்களும், தகேஸ் நாராயணன் 482 மதிப்பெண் களும், சுர்வேஷ் ராஜ் 480 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். மேலும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக பயின்ற காருகா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதே போல் மாணவர் பிரனேஸ் 485 மதிப்பெண்களும், தேவதர்ஷன் 477 மதிப்பெண்களும், தனுஶ்ரீ 472 மதிப்பெண்களும், ஜோனி 467 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனர்.


ஏற்கனவே நடைபெற்ற ஜேஈஈ மெயின் தேர்வில் மாணவர் பரத் 99.69 பர்சன்டைல் பெற்றுள்ளார். இப்பள்ளி மாணவ மாணவியர்கள் ஒவ்வொரு வருடமும் மருத்துவம், ஐஐடி, என்ஐடி தேர்வுகளில் மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழகத்தின் முன்னோடி கல்லூரிகளில் சேர்க்கை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களை பள்ளித் தாளாளர் எஸ்.சத்யமூர்த்தி, முதல்வர் டிவித்தியாசாகர் , பள்ளியின் முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.பிரனேஷ் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
ராசி இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவ மாணவியர் தனித்தனி விடுதி வசதியுடன் கடந்த 18 வருடங்களாக நீட் மற்றும் ஜேஈஈ தேர்வுகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீட் தேர்வு ஏற்கனவே எழுதியவர்கள் மறுபடியும் எழுதுவதற்கான சிறப்பு வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன என ராசியின் நீட் ரிப்பீட்டர்ஸ் கோச்சிங் இன்ஸ்டிடியூட் டைரக்டர் S.பிரனேஷ் தெரிவித்துள்ளார்.