ராசிபுரம் எஸ்ஆர்வி இன்னோவேட்டிவ் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ மாணவியர்கள் பிளஸ் டூ சிபிஎஸ்இ தேர்வில் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இப்பள்ளி மாணவர் அக்சத் யாதவ் 500-க்கு 481 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். பள்ளி மாணவர் ஹரிஹரசுதன் 500க்கு 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி வி.சுபஸ்ரீ 500க்கு 470 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். பள்ளியில் மூன்று மாணவ மாணவியர்கள் 500க்கு 470க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும், 14 மாணவர்கள் 450 க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும், 83 மாணவ மாணவியர்கள் 400-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களை பள்ளியின் தலைவர் கள் ஏ.ராமசாமி, எம்.குமரவேல், செயலாளர் எஸ்.செல்வராஜன் ,பொருளாளர் பி. சுவாமிநாதன் மேனேஜிங் டிரஸ்டி ஏ.ஆர்.துரைசாமி, இணைச் செயலாளர் பி.சத்தியமூர்த்தி , பள்ளி முதல்வர் டி.ஆர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.