Tuesday, May 20, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்அரியாகவுண்டம்பட்டியில் 65-வது ஆண்டு மாநில கபடி போட்டி: மதுரை கஸ்டம்ஸ் அணிக்கு கோப்பை

அரியாகவுண்டம்பட்டியில் 65-வது ஆண்டு மாநில கபடி போட்டி: மதுரை கஸ்டம்ஸ் அணிக்கு கோப்பை

ராசிபுரம் அருகயேுள்ள அரி்யாகவுண்பட்டியில் நடைபெற்ற 65-ம் ஆண்டு கபடி போட்டியில் மதுரை கஸ்டம்ஸ் அணி இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டி பகுதியில், 65-ம் ஆண்டாக தமிழ்நாடு மாநில அளவிலான, ஆடவர் கபடி போட்டி, 2 மே.8, 9 ஆகிய இருநாட்கள் இரவுப் போட்டியாக நடைபெற்றது. கபடி விளையாட்டில் தமிழகத்தில் பாரம்பரியமிக்க அரியாகவுண்டம்பட்டி இளையவர் சடுகுடு கிளப் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கபடி போட்டி தொடக்க விழாவில்
நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தின் ஏ கிரேடு அணிகளான சென்னை – வருமான வரித் துறை, மதுரை – கஸ்டம்ஸ் , சேலம்- தம்மம்பட்டி, வாழப்பாடி, நாமக்கல்- குமாரபாளையம், திருச்செங்கோடு, வெங்கரை, மோகனூர், நன்செய் இடையாறு, ஈரோடு, கரூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 19 அணியினர் கலந்துகொண்டு விளையாடினர்.

65-ம் ஆண்டு ஆசிய சாதனை தொடர் ஆண்கள் போட்டியாக இந்த கபடி போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆசியன் ரெக்கார்ட்ஸ் அகதெமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகதெமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகள் போட்டியை பார்வையிட்டு இந்த சாதனையை அங்கீகரித்தன.

போட்டிகள் நாக் அவுட் முறையில், மின்னொளியில் நடைபெற்றன வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற மதுரை கஸ்டம்ஸ் அணிக்கு ரூ.65 ஆயிரம், 2-ம் இடம் பெற்ற சென்னை வருமான வரித்துறை அணிக்கு ரூ.45 ஆயிரம், 3 மற்றும் 4-ம் பரிசு தலா ரூ. 25 ஆயிரம் முறையே குமாரபாளையம் கண்ணப்பர், சேலம் 7 லயன்ஸ் ஆகிய அணிகளுக்கு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட்டன. இந்த கபடி போட்டிகளை ராசிபுரம், அரியாகவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை, சுற்று வட்டார பகுதி கபடி ரசிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர். இந்த 65-ம் ஆண்டு ஆசிய சாதனை தொடர் ஆடவர் ஏ கிரேடு கபடி போட்டிகளை, அரியாகவுண்டம்பட்டி இளையவர் சடுகுடு கிளப் அறக்கட்டளை தலைவர் ஏ.கே.பி. மணி, செயலாளர் என்.அருள், பொருளாளர் பி.நடேசன் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!