Friday, April 18, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeதகவல்கள்நாமக்கல் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணிக்கு நேரடி நியமனம்.

நாமக்கல் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணிக்கு நேரடி நியமனம்.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 321 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இனசுழற்சி வாரியாக தெரிந்துகொள்ளலாம்.
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஒராண்டுகால பணிக்கு பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay- ரூ.3000- 9000)) ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். நியமனம் கோரும் மைத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைபட்ட தூரம் 3 கீ.மீ க்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி-குக்கிராமம்-வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை)
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.28.04.2025 விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ்- SSLC மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிட சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று போன்றவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். நேர்முக தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!