ராசிபுரம் பகுதியின் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து மறைந்த கே.ராமசாமி நினைவு தினத்தினத்தை தொடர்ந்து சனிக்கிழமை அவரது திரு உருவ படத்திறப்பு தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கே.ஆர்.ராஜேஸ்குமார் எம்பி., ஆகியோர் பங்கேற்று படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ராசிபுரம் கூட்டுறவு நிலவள வங்கியின் தலைவராக 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர் கே.ஆர். (எ) கே.ராமசாமி, இவர் 1968-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை தொடர்ந்து பல முறை கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். மேலும், மாநில நிலவள வங்கியின் தலைவராகவும் இருந்தார்.
பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோருடன் நெருங்கி பழகியவர். இவருக்கு அண்ணா முதல்வராக இருந்த போது 1968-ம் ஆண்டும், கருணாநிதி முதல்வராக இருந்த போது 1999-ம் ஆண்டும் சிறந்த கூட்டுறவாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரது 25-வது நினைவு நாளான சனிக்கிழமை கே.ராமசாமி திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தலைமையில் கூட்டுறவு வங்கி வளாகத்தில் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சியினர் பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் கட்சியின் தொகுதி பார்வையாளர் நன்னியூர் ராஜேந்திரன், ராசிபுரம் நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், முன்னாள் எம்எல்ஏ., கே.பி.ராமசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்ற மரியாதை செலுத்தினர்.