நாமக்கல், சேலம் சாலையில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியத்தின் டீலரான ஆஞ்சநேயா ஃபியூல் ஏஜென்சீஸ் நிறுவனத்தில் ஸ்பீடு பெட்ரோல் அறிமுகம் மற்றும் விற்பனை தொடக்கவிழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ராஜேஸ் கண்ணன் ஸ்பீடு பெட்ரோல் பம்ப்பினை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் ஶ்ரீகிருஷ்ணமுரளி பனிக்கர், வங்கலவா விவேக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விருந்தினர்களை ஆஞ்சநேயா ஃபியூல் ஏஜென்சீஸ் உரிமையாளர் கோமதி தட்சினாமூர்த்தி, ரம்யா மணிவண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.