Thursday, March 27, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 60 கிராம ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 60 கிராம ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 60 ஊாரட்சிகளில் பிப்.21 முதல் மார்ச்.13 வரை நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் என நாமக்கல் ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் 60 ஊராட்சிகளில் வருகின்ற 21.02.202 முதல் 13.03.2025 வரை நடைபெறவுள்ள மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்களில்
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்‌ பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார்.

தமிழக முதல்வர் அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் அதிக அளவில் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் 3-ம் கட்டமாக ”மக்களுடன் முதல்வர்” முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 60 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு “மக்களுடன் முதல்வர்” திட்டம் மூன்றாம் கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி வருகின்ற 21.02.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நாமக்கல் மாவட்டத்தில் 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டி, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மங்களபுரம், கார்கூடல்பட்டி, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் திருமலைப்பட்டி, நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வீசாணம் ஆகிய 5 கிராம ஊராட்சிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளது.

21.02.2025 முதல் 13.03.2025 வரை நடைபெறவுள்ள அனைத்து முகாம்களிலும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌, மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ளார்.

இம்முகாமில், “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன், மகளிர் உரிமைத்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்- மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை ஆகிய பல்வேறு துறைகள் சார்ந்த மனுக்கள் இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும். மேற்படி சேவைகள் தொடர்பான மனுக்களை முகாம் நடைபெறும் நாளன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அந்தந்த கிராம ஊராட்சிபகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தனிநபர்கள் தங்களது குறைகள் தொடர்பாக மனு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!