விவசாய பணிகளுக்கு போர்வெல் தோண்ட ஜிஎஸ்டி வரிகள் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை அடிப்படையில் வரி விலக்கு உண்டு என மாநிலங்களவையில் K.R.N. ராஜேஷ் குமார் M,P., கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம் அளித்தார். விவசாய பணிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க GST வரிவிலக்குக்கு தெளிவு பெற்று தந்த K.R.N.ராஜேஸ்குமார் MP.,க்கு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில். நிதித்துறை இணையமைச்சர் ஸ்ரீ பங்கஜ் சவுத்ரியிடம்
விவசாயத்திற்காக போர்வெல் தோண்ட GST வரிவிலக்கு செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், அரசாங்கம் வழங்கிய வழிகாட்டுதல்கள் / விளக்கங்கள் அளிக்க கேட்டுக் கொண்டார். விவசாய பணிக்கான போர்வெல் தோண்டுவதற்கு ஜிஎஸ்டி வரி தொடர்பான தவறான விளக்கங்களை நிவர்த்தி செய்வதற்கும், நாடு முழுவதும் விதிவிலக்கை சீராகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும் மத்திய அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வரிவிலக்கை எளிதாக பெற நடவடிக்கைகள் என்ன ? என்ற அடிப்படையில் மாநிலங்களவையில் விளக்கம் கேட்டிருந்தார்.
இதற்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் தண்ணீர் வழங்குவதற்காக ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவது, சாகுபடி, அறுவடை, கதிரடித்தல், உணவு, நார், எரிபொருள், மூலப்பொருள், தாவரங்களை வளர்ப்பது உள்ளிட்ட எந்தவொரு விவசாயப் பொருட்களின் உற்பத்திக்கும், விவசாயம் அல்லது விவசாயப் பொருட்கள் தொடர்பான சேவைகளுக்கு ஜிஎஸ்டியின் கீழ் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன என பதிலளித்தார்.
விவசாய பணிகளுக்கு ஆழ்துளை குழாய் கிணறு அமைக்க GST வரி விலக்குக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெளிவு பெற்று தந்தமை ராஜேஷ்குமார் எம்பி க்கு பிறகு உரிமையாளர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேஎஸ்.மூர்த்தி முன்னிலையில் திருச்செங்கோடு ரிக்உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்எஸ்.சுரேஷ், தலைமையில் செயலாளர் ரமேஷ், பொருளாளர் பாலகுமார் ராமசாமி, நிர்வாக குழு உறுப்பினர்கள் ஸ்ரீ செந்தில், பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.