ராசிபுரம் பகுதி கல்வி நிறுவனங்களின் குடியரசு தினவிழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. பாவை கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். கொடி வணக்கத்துடன் துவங்கிய விழாவில் மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசியக் கொடியேற்றி வைத்துப் பேசினார்.

இதில் பேசிய ஆடிட்டர் என்.வி.நடராஜன், மாணவர் சமுதாயம் அரசியலமைப்பு சட்டம், தேச ஒற்றுமை, சகோதாரத்துவம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றார். பின்னர் பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து சிறந்த ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் விருதினை, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்ற பாவை பொறியியல் கல்லூரி நாட்டு என்எஸ்ஸ்., அலுவலர் ரத்னகுமார், இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற இளைஞர் சாசக முகாமில் பங்கு பெற்ற என்எஸ்எஸ் மாணவ, மாணவியருக்கும், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற அனைத்திந்திய மலையேற்றப் பயிற்சி முகாமில் பங்கு பெற்று முதலிடம் பெற்ற பாவை கலை அறிவியல் கல்லூரி மாணவி கிருத்திகா, ரத்த தானம் மற்றும் பிற போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பாிசுகள், சான்றிதழ்கள் போன்றவற்றை ஆடிட்டர் என்.வி.நடராஜன் வழங்கி பாராட்டினர். விழாவில் கல்வி நிறுவனத் தாளாளர் ங்கை நடராஜன், துணைத்தலைவர் டி.ஆர்.மணிசேகரன், செயலாளர் டி.ஆர்.பழனிவேல், துணைச்செயலாளர் என்.பழனிவேல், இயக்குநர் (சேர்க்கை) வழக்குரைஞர் கே.செந்தில், இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், பள்ளியின் துணைத் தலைவர் எம்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவி பி.கனிஷ்கா வரவேற்றார். பள்ளியின் தலைவர் சி.நடராஜூ தேசியக் கொடியேற்று வைத்தார். பள்ளியின் செயலர் வி.சுந்தரராஜன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புலவர் பரமேஸ்வரனை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். இலக்கியப் போட்டிகள், கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளியின் பொருளாளர் வி.ராமதாஸ், துணைத் தலைவர் கே.குமாரசாமி, இணைச்செயலாளர் வி.பாலகிருஷ்ணன், இயக்குனர்கள் டாக்டர் ஆர்.எம்.கிருஷ்ணன், ஆர்.பெத்தண்ணன், என்.மாணிக்கம், எஸ்.சந்திரசேகரன், பள்ளியின் முதல்வர் பி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போல் ஆண்டகளூர்கேட் ஸ்ரீவெங்கடேஸ்வரா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழால், பள்ளியின் செயலர் க.சிதம்பரம் தேசியக் கொடியேற்றி வைத்து, மாணவர்களிடையே குடியரசு தினம் குறித்துப் பேசினார். பின்னர் பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

பள்ளி தலைமையாசிரியர் ரெ.உமாதேவி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் எம்.மாதேஸ்வரன் தேசியக்கொடியேற்றி வைத்துப் பேசினார். வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் கல்லூரி செயலர் ஆர்.முத்துவேல் தலைமை வகித்தார். தாளாளர் கே.பி.ராமசாமி பங்கேற்று தேசியக் கொடியேற்றி வைத்துப் பேசினார். கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் என பலர் பங்கேற்றனர்.

மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் செயலாளர் இரா.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்துத் தேசியக் கொடியேற்றினார். இந்திய குடியரசின் சிறப்பு குறித்துப் பேசினார். பின்னர், மகாத்மா காந்தி, நேதாஜி திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். கல்லூரியின் முதல்வர் ப.அசோக்குமார் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதே போல் வித்யா நிகேதன் பள்ளி சார்பில் குடியரசு தினவிழாவில் நிர்வாகிகள் பங்கேற்று தேசியக்கொடியேற்றி வைத்தனர்.