ராசிபுரம்,ஜன.19: ராசிபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விட்டுவிட்டு மழை பெய்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சிலநாட்களாவே வெய்யில் மற்றும் பனி அதிக அளவில் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென மேகமூட்டம் காணப்பட்டது. இதனையடுத்து காலை முதலே பல இடங்களிலும் மழை திடீரென விட்டு விட்டு பெய்தது. திடீரென பலத்த மழை பெய்வதும் சில நிமிடங்களில் நிற்பதுமாக இருந்தது. இந்த மழையானது ராசிபுரம், பட்டணம், வடுகம் காக்காவேரி உள்ளிட்ட ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிளில் செய்தது. காலை முதல் விட்டு விட்டு பெய்த மழையால் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வெளியே செல்லமுடியாமல் மக்கள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
ராசிபுரம் பகுதியில் விட்டு விட்டு மழை
RELATED ARTICLES