நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் வணிகர்களுடான சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் நகர மளிகை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் நகராட்சி ஆணையாளர் சென்னகிருஷ்ணனுடன் சந்தித்து பேசினார். இதில் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப் தடை குறித்தும் விளக்கிக்கூறப்பட்டது.
இச்சந்திப்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாட்டினை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக வணிகர்கள் உறுதி அளித்தனர். இச்சந்திப்பில் நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி உடனிருந்தார்.