Wednesday, November 4, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்புதுசத்திரம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது

புதுசத்திரம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது

புதுசத்திரம் அருகேயுள்ள ஏளூர் பகுதியில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 66 வயது பெண்ணிடம் கழுத்தில் இருந்த 10 சவரன் நகைகளை பறித்து சென்ற இரு இளைஞர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமைகைது செய்துள்ளனர்.

ஏளூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஒய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான கோவிந்தராஜன் என்பவர் மனைவி தனம் (66) என்பவர் திங்கள்கிழமை மாலை வீட்டின் நின்று கொண்டிருந்தார். அப்போது ஹோண்டா சைன் பைக்கில் வந்த இரு இளைஞர்கள் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரின் போட்டோவை காட்டி அவரது முகவரி குறித்து அடையாளம் தெரியுமா என கேட்டு விசாரிப்பது போல் ஏமாற்றி அவரின் கவனத்தை திசை திருப்பி கழுத்தில் இருந்த தாலி கொடியுடன் கூடிய 10 சவரன் நகையை பறித்துச் சென்றனர்.

இது குறித்து தனம் கொடுத்த புகாரின் பேரில் புதுசத்திரம் காவல் நிலையத்தில் தனம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வி்சாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளில் இளைஞர்கள் குறித்து இருசக்கர வாகன எண் பதிவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் நகை பறித்துச் சென்ற இரு இளைஞர்கள் பரமத்திவேலூர் மற்றும் சிவகிரி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து ஈரோடு மாவட்டம் சிவகிரி சடையபுரம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் மகனான பைக் மெக்கானிக் கெளசிக் (24), பரமத்திவேலூர் கடைவீதி லோகநாதன் என்பவர் மகனான கேபிள் இணைப்புத் தொழில் செய்யும் விக்னேஷ் (26) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகைகள், அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. நகை பறிப்பு சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் திருடர்களை பிடித்து காவல்துறையினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!