நாமகிரிப்பேட்டை பகுதியில் இரு சக்கர வாகனத்தை வாட்டர் வாஷ் செய்த போது மெக்கானிக் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை நடுவீதி, அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் மகன் கார்த்திக் (26). இவர் நாமகிரிப்பேட்டை ஆத்தூர் மெயின் ரோட்டில் யூனியன் வங்கி அருகில் இயங்கி வரும் பைக் பட்டறையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை மாலை சர்வீஸ்க்கு வந்த பைக்கை வாட்டார் வாஷ் செய்ய சென்றார். பட்டறைக்கு எதிரே உள்ள பகுதியில் வாட்டர் வாஷ் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வாட்டர் வாஷ் மோட்டாரின் காயில் திடீரென பழுதானதாகக் கூறப்படுகிறது. இதனால் மோட்டாரில் இருந்து பாய்ந்த மின்சாரம், தண்ணீர் வழியாக கார்த்திக் மீதும் பாய்ந்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் வாட்டர் வாஷ் செய்யச் சென்ற கார்த்திக் நீண்ட நேரமாகியும் பட்டறைக்குத் திரும்பி வராததால், உடன் வேலை பார்த்த மற்ற தொழிலாளர்கள் சந்தேகம் அடைந்து எதிரே சென்று பார்த்தனர். அப்போது கார்த்திக் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தகவலறிந்த சம்பவ இடம் வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராசிபுரம் : வாட்டர் வாஷ் செய்த போது மின்சாரம் தாக்கி மெக்கானிக் உயிரிழப்பு
RELATED ARTICLES




