Friday, July 31, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைமஹேந்ரா பொறியியல் கல்லூரியில் சர்வதேச மாநாட்டின் அறிமுக விழா

மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் சர்வதேச மாநாட்டின் அறிமுக விழா

மல்லசமுத்திரம் மஹேந்ரா கல்வி நிறுவனங்களும், மலேசியாவின் யுனிவர்சிட்டி ஆப் தெனாகா நேஷனல் பல்கலைக்கழகமும் இணைந்து சர்வதேச மாநாட்டின் அறிமுக விழாவினை வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

மஹேந்ரா கல்வி நிறுவனங்களும், மலேசிய யுனிவர்சிட்டி ஆப் தெனாகா நேஷனல் பல்கலைக்கழகமும் இணைந்து சர்வதேச கூட்டு மாநாட்டை – IC-CREATE 2026 – அக்.27 முதல் அக்.30 வரை மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடத்துகிறது. மஹேந்திரா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான அறிமுக நிகழ்வில் மஹேந்ரா கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பா.மஹா அஜய் பிரசாத் தலைமை வகித்தார். இதில் பேசிய அவர், இந்த மாநாட்டால் கல்வி, ஆராய்ச்சி, தொழில்துறையில் இருதரப்பு இணைப்பை வலுப்படுத்துவதுடன், மாணவர்களிடம் புதுமை, ஆராய்ச்சி, தொழில் முனைவு சிந்தனையை வளர்க்கும் வகையில் இம்மாநாடு அமையும் என்றார்.

இந்த சர்வதேச ஒத்துழைப்பை நனவாக்க முன்முயற்சி, நம்பிக்கை மற்றும் உறுதியான ஆதரவை வழங்கிய UNITEN பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு, முனைவர் கவிக்குமார் ஜேக்கப் வாழ்த்து தெரிவித்துப் பேசினார். விழாவில் கல்லூரி தலைமை கல்வி அலுவலர் பேராசிரியர் கருணாகரன் பேசுகையில், கல்விசார் மேன்மை, ஆராய்ச்சி ஒத்துழைப்பு, புதுமை மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளை மேம்படுத்தும் மைல்கல் சர்வதேச மாநாடாக IC-CREATE 2026-ஐ உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் என்று பேசினார்.

இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு, நிலையான தொழில்நுட்பங்கள், தரவு அறிவியல், நவீன பொறியியல் கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புக் கலைகளின் தொழில்நுட்பப் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். ஆசிரியர்கள்,மாணமற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடல் அமர்வுகளும் நடைபெறுகின்றன என தெரிவித்துள்ளனர். மாநாடு அறிமுக நிகழ்ச்சியில் மஹேந்ரா கல்விக் குழும முதல்வர்கள் எம்.ரமேஷ், டி.இளங்கோ, எஸ்.மோகனசுந்தரராஜு, எம்.செந்தில்குமார், எஸ்.அர்ஜுனன், கல்வி நிறுவனச் செயல் அலுவலர் சி.டி.சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் டி.ஜேசுதாஸ், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!