Wednesday, July 15, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைவநேத்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன் வகுப்புகள் துவக்க விழா

வநேத்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன் வகுப்புகள் துவக்க விழா

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷனில் நடப்பு கல்வியாண்டு முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி மாணவர் சேர்க்கை பிரிவு தலைவர் ஜி.பிரபு வரவேற்றுப் பேசினார். உள் தர உறுதி பிரிவு தலைவர் எம்.பாலமுருகன் அறிமுக உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.மணி முன்னிலை வகித்தார். கல்லூரியின் அறங்காவலர் ஆர்.முத்துவேல் விழாவில் பங்கேற்றுப் பேசுகையில், மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியுடன் தனித் திறன்களை வளர்த்துக் கொண்டால் வேலைவாய்ப்பானது எளிதில் கிடைக்கும் மற்றும் ஆங்கில மொழித்திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஆய்வகங்களை மிகச் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மற்றும் பெற்றோர்களின் கனவை நனவாக்கக்கூடிய சிறந்த மாணவர்களாக விளங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் இவ்விழாவில் நடந்து முடிந்த ஏப்ரல் – 2026 அரசு வாரியத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்களுடன் ஒ கிரேடு பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பையினை வழங்கி கௌரவப்படுத்தினார் . விழாவின் முடிவில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் கே.மனோஜ்குமார் நன்றி கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!