ராசிபுரம் அருகேயுள்ள நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த குறவர் இன மக்கள் பழனி கோவிலில் முருகர்-வள்ளி திருமண நிகழ்ச்சிக்காக சீர் வரிசை கொண்டு சென்றனர். முருகர் மலைக்குறவர் இனத்தில் பிறந்த வள்ளையை மணமுடித்ததாக ஐதீகம். இதனையடுத்து முருகர் திருமண நாளை கொண்டாடும் வகையில், மாசி மாதம் பழனி கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த குறவர் இன மக்கள்.

அந்த வகையில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் வள்ளிக்கு சீர்வரிசையாக மா, பலா,வாழை, அதிரசம்,தேன் , வெல்லம், கள்ள உருண்டை, தேங்காய் ,பழம், பூக்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை எடுத்துச்சென்றனர். நாரைகிணறு பகுதியில் உள்ள பெருமாள் கோவில் முன்பு வைத்து அங்கு பெண்கள் கும்மி அடித்து கொண்டாடி பின்னர் அதனை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் வாகனத்தில் ஏற்றி பழனி க்கு புறப்பட்டு சென்றனர். இதனை பழனி கோவிலுக்கு சென்று படையல் செய்து வழிபடுவார்கள் இது பழங்காலத்திலிருந்தே தொடர்ந்து பின்பற்றி வருவதாக நாரைக்கிணறு பகுதி மலைவாழ் குறவர் இன மக்கள் தெரிவித்தனர்.





