Wednesday, April 15, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைமஹேந்ரா கல்லூரியில் இந்திய தொழில் நுட்பக் கல்வி சங்கத்தின் 24வது மாணவர் மாநாடு

மஹேந்ரா கல்லூரியில் இந்திய தொழில் நுட்பக் கல்வி சங்கத்தின் 24வது மாணவர் மாநாடு

மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரி, இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கம் (ISTE) தமிழ்நாடு பிரிவு ஆகியன இணைந்து, 24வது ISTE மாணவர் மாநாட்டை நடத்தியது. “தொழில்நுட்ப, பாதுகாப்பான , நிலையான வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் செயற்கை நுண்ணறிவின் முக்கிய பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கும் வகையில் கல்வி சிந்தனையாளர்கள், பல்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து இதில் பங்கேற்றனர். இதற்கான துவக்க விழாவில் மஹேந்ரா கல்லூரி தலைவர் எம்.ஜி. பாரத் குமார் தலைமை வகித்தார்.

அதியமான் கல்லூரி இயக்குனர் டாக்டர் ரங்கநாத், துபாய் வைஸ் மைன்ட்ஸ் இயக்குனர் ராம்கி விஜயன் ஆகியோர் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, முற்போக்கான கல்விச் சூழலை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு கிளை ஐஎஸ்டிஇ., தலைவர், டாக்டர் சங்கர சுப்பிரமணியம், செயலாளர் டாக்டர் சௌரிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிலையான மற்றும் புதுமையான எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினர்.

இந்த மாநாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் மாணவர்களின் திறன்களை முன்னிலைப்படுத்த வடிவமைக்கப்பட்ட பல்வேறு ஆற்றல்மிக்க செயல்பாடுகள் மற்றும் போட்டிகளை காட்சிப்படுத்தியது. இந்தப் போட்டிகள் மாணவர்களிடையே உந்துதலை ஏற்படுத்தியது. படைப்பாற்றல், சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் நிஜ உலக சவால்களை எதிர்கொள்வதில் செயற்கை நுண்ணறிவின் (AI ) நடைமுறை பயன்பாடு, தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறையில் இதன் முன்மாதிரியான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், 104 விருதுகளை அவர்களின் திறன்களின் அடிப்படையில் அம் மாணவர்களுக்கு ISTE சிறந்த மாணவர் விருது வழங்கப்பட்டது.

எதிர்கால தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை வளர்ப்பதற்கான மஹேந்ரா பொறியியல் கல்லூரியின் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த ISTE மாணவர் மாநாடு- 2026 ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. இந்த நிகழ்வு ஒத்துழைப்பு மற்றும் படைப்பாற்றல் சூழலை வளர்த்தது, அடுத்த தலைமுறைக்கு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வதில், தொழில்நுட்பக் கல்வி வகிக்கும் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இணையதளங்கள் மூலம். முன்னேறும் தொழில்நுட்பக் கல்வியை வடிவமைப்பதற்கும், வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிலப்பரப்பில் சிறந்து விளங்கத் தேவையான திறன்கள் மற்றும் அறிவை மாணவர்களை தயார்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி பயனாக இருந்தது.

விழாவில் மஹேந்ரா பொறியியல் கல்லூரிகளின் செயல் இயக்குநர் டாக்டர் ஆர் சாம்சன் ரவீந்திரன், குழும முதல்வர்கள் டாக்டர் ரமேஷ், டாக்டர் இளங்கோ, புல முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் தவமணி மற்றும் டாக்டர் வித்யா ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!