Sunday, February 22, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்நாமக்கல்லில் நீர் மோர் பந்தல்

நாமக்கல்லில் நீர் மோர் பந்தல்

சர்வம் கல்வி அறக்கட்டளை, மக்களோடு நாம் இயக்கம், நற்பவி இயற்கை விவசாய குழுமம், எம்ஜிஆர் சேவை மையம் இணைந்து கோடை வெப்பத்தை தணிக்க நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில், பூங்கா சாலையில் நீர்மோர், தண்ணீர் பந்தல் அமைத்துள்ளனர்.

இதன் தொடக்க விழா நிகழ்வில் ஶ்ரீ சாரா குரூப்ஸ் ஶ்ரீதேவி மோகன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், மக்களோடு நாம் இயக்கத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மோர் வழங்கி தொடங்கி வைத்தனர்.

நிகழ்வில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், மாவட்ட துணை தலைவர் தேவி உதயகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், பழனிவேல், சதாசிவம், மதியழகன், வெங்கடேஷ், சபரீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சர்வம் கல்வி அறக்கட்டளை ரம்யா, மக்களோடு நாம் சமியுல்லா, மக்களோடு நாம் மனோகரன், சர்வம் கல்வி அறக்கட்டளை மீனா ஆகியோர் செய்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!