தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு பழந்தின்னிப்பட்டி கலைமகள் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆட்டையாம்பட்டி டெக்ஸ் சிட்டி அரிமா சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான முப்பெரும் கலைப்போட்டியில் 400 கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.
பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி & கையெழுத்துப்போட்டி என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது.
இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் பள்ளியின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளியின் தாளாளர் சம்பூரணம், ஆட்டையாம்பட்டி டெக்ஸிட்டி அரிமா நிர்வாகிகள் மற்றும் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் இப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு வழங்கி கௌரவித்தனர்.