வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு ஞானச்சிற்பி விருது வழங்கும் விழா நடைபெற்றது. ராசிபுரம் வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கத்தில் ஆவணி அன்னதானம் பூசவிழா, ஆசிரியர் தினவிழா போன்றவை நடைபெற்றது. இதில் ராசிபுரம் வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கத் தலைவர் கே.என்.நடேசன் தலைமை வகித்தார். ஆசிரியர் பெ.செளந்திரராஜன் வரவேற்றார். ஞானமணி கல்வி நிறுவனங்களின் மேலாண்மைத்துறை உதவிப் பேராசிரியர் தூ.ந.சீனிவாசன் முன்னிலை வகித்தார். விழாவில் நாமக்கல் பள்ளித் துணை ஆய்வாளர் கை.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஆசிரியர் தினவிழாவை தொடர்ந்து சிறந்த ஆசிரியர்களுக்கு வள்ளலார் ஞானச்சிற்பி விருது வழங்கிப் பேசினார். இதில் வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி தமிழாசிரியர் மு.சேகர், எஸ்ஆர்வி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அ.ஆரோக்கியதாஸ், தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சா.ரவி ஆகியோருக்கு வள்ளலார் ஞானச்சிற்பி விருது விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவர் ஆர்.சிவக்குமார், சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் பி.கே.ராஜேந்திரன், ஒய்வு பெற்ற கூட்டுறவுத்துறை மேலாளர் கை.ஜெயபிரகாஷ் தொழிலதிபர் கே.கே.வி.கிருஷ்ணமூர்த்தி, புலவர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ் கழகம் பி.தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.