Tuesday, May 20, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலை12ம் வகுப்பு பொதுத் தேர்வில் குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். நிஷா என்ற மாணவி 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். சுதர்சன் என்ற மாணவர் 584 மதிப்பெண்களும், காயத்திரி என்ற மாணவி 580 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். கணிதம், இயற்பியல், கணினி பயன்பாடு, கணக்கு பதிவியல், வணிகவியல் முறையே தலா ஒருவர் வீதமும், கணினி அறிவியலில் 5 மாணவர்களும் 100க்கு ௧௦௦ மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 17 மாணவர்களும், 500க்கு மேல் 49 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை, உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பள்ளி தாளாளர் ராமசாமி, செயலர் கோமதி வெங்கடாசலம், பொருளர் கந்தசாமி, இயக்குனர்கள் மற்றும் முதல்வர் பிரின்சி மெர்லின் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!