Thursday, August 20, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்சேலம் இந்திய தொழில்முனைவோர் மேம்பட்டு நிறுவனம், ஏவிஎஸ் கலை அறிவியல் கல்லூரியில் பிஸ்க்காம் -2026 கருத்தரங்கம்...

சேலம் இந்திய தொழில்முனைவோர் மேம்பட்டு நிறுவனம், ஏவிஎஸ் கலை அறிவியல் கல்லூரியில் பிஸ்க்காம் -2026 கருத்தரங்கம் மற்றும் பொருட்காட்சி

சர்வதேச தொழில்முனைவோர் தினத்தை கொண்டாடும் விதமாக சேலத்தில் இந்திய தொழில்முனைவோர் மேம்பட்டு நிறுவனம், எ வி எஸ் கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து இரண்டு நாட்கள் கருத்தரங்கம் மற்றும் பொருட்காட்சியை- பிஸ்க்காம் -2026 (BIZCOM2026) நடத்தியது. விழா வில் கல்லூரி செயலாளர் ராஜவிநாயகம் தலைமை வகித்தார். இந்திய தொழில்முனைவோர் மேம்பட்டு நிறுவன திட்ட அலுவலர் முனைவர் ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

கல்லூரி முதல்வர் முதல்வர் முனைவர் கார்மல் மெர்சி பிரியா குத்துவிளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தார். கல்லூரி மாணவர்களின் பல்வேறு அறிவியல் புத்தாக்க கண்டுபிடிப்புகள் காட்சி படுத்தப்பட்டு விளக்கப்பட்டது. தமிழ் துறையின் சார்பாக 99 வகையான பூக்கள் காட்சிப்படுத்தப்பட்டு அதன் மருத்துவ பயன்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டது. வணிகவியல் துறை, வரலாற்று துறை மாணவர்களின் அரங்குகள் மாணவர்களிடையே தொழில் தொடங்கும் ஆர்வத்தை உள்ளடக்கியதாக அமைந்தது.

இந்திய தொழில்முனைவோர் மேம்பட்டு நிறுவனம்(EDII), வீஆக்ட் (WeAct) மற்றும் அசெஞ்சர்(Accenture) சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பயனாளிகள், தாங்கள்  உற்பத்தி செய்த லேப்டாப் பேக், பேபி பெட், பல்வேறு வண்ண மயமான பைகள், லட்டு, தினை முறுக்கு, சிறுதானிய உணவு பொருட்கள் காட்சி படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது, கல்லூரி மாணவ மாணவிகளிடையே தொழில் தொடங்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக அமைந்தது.

சர்வதேச தொழில்முனைவோர் தினவிழாவில் இந்திய தொழில்முனைவோர் மேம்பட்டு  நிறுவன திட்ட அலுவலர் முனைவர் ஜெய்சங்கர் தனது உரையில் , ஆண்டுதோறும் அரசு, பொதுத்துறை, தனியார் துறை வாயிலாக உருவாக கூடிய வேலைவாய்ப்பு எண்ணிக்கையை காட்டிலும், பட்ட படிப்பு முடித்தவர்கள் எண்ணிக்கை பல்வேறு மடங்கு அதிகமாக உள்ளதாகவும், குறிப்பாக இந்திய அளவில் தோராயமாக 1 கோடி மாணவர்கள் பட்ட படிப்பு முடித்து ஆண்டுதோறும் வெளி வருகிறார்கள் எனவும்,  மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலைவாய்ப்பு அளிப்பவர்களாக உருவாக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!