ராசிபுரம் நகரில் பல்வேறு பிரதான சாலைகளில் தெரு மின் விளக்குகள் எரியாததால் நகரமே இருளில் மூழ்கியது. பஸ் நிலையத்தையொட்டிய வாரச்சந்தை பகுதியிலும்மின் விளக்குகள் எரியாததால், இருள் சூழ்ந்ததால் வாரச்சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ராசிபுரம் நகரில் உள்ள அனைத்து சாலைகளின் மின்விளக்குகளும் நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நாமக்கல் சாலை போன்ற முக்கிய சாலைகளின் சென்டர் மீடியன் மின்விளக்குகள், தெரு மின்விளக்குகள் எரியவில்லை.

இருளில் மூழ்கிய வாரச்சந்தை: ராசிபுரம் நகரில் பேருந்து நிலையத்தையொட்டி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கூடும் வாரசந்தை பகுதியிலும் மின்விளக்குகள் எரியாததால், வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நகராட்சி மின்விளக்குகள் பராமரிக்கும் ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நிர்வாகம் உரிய தொகை செலுத்ததாதல், மின் விளக்குகளை ஒப்பந்ததாரர் அணைத்து வைத்ததால் எரியவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து உடனடியாக நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





