ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் அலுவல் முறை வருகை விழா புதன்கிழமை நடைபெற்றது. இதனை தொடர்ந்து முன்னதாக நடைபெற்ற விழாவில், ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ரோட்டரி ஆளுநர் பி.சிவசுந்தரத்திற்கு பூர்ண கும்பமரியாதை வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து நெகிழிக்கு மாற்றாக மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி சங்கம் சார்பில் பேருந்து நிலையத்தில் பயணிகள், பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. பின்னர் நாமகிரிப்பேட்டை பகுதியில் ஊனமுற்றோர் நலச்சங்க பெண்களுக்கு 1000 நாப்கின்கள் வழங்கப்பட்டது. மேலும் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கலையரங்கம் திறப்பு விழா, அரியாகவுண்டம்பட்டி சாரோன் முதியோர் இல்லத்தில் மேம்படுத்தப்பட்ட உணவுக்கூடம், வாஷ்பேசின் யூனிட் திறப்பு , அன்னதானம் வழங்குதல் போன்றவை நடைபெற்றது. மாவட்ட ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி.சிவசுந்தரம் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கினர்.

ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் இ.என்.சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், ரோட்டரி மண்டல உதவி ஆளுநர் எஸ்.அன்பழகன் முன்னிலை வகித்தார். ரோட்டரி நிர்வாகிகள் டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், கை.கந்தசாமி, கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், கே.குணசேகரன், எல்.சிவக்குமார், ஏ.மஸ்தான், ஏ.ஜி.ஜெயக்குமார், முருகானந்தம், சி.கே.சீனிவாசன், பி.கண்ணன், நடராஜன் மணிமாறன், வெங்கடாஜலம், ஆர்.எஸ்.ரங்கசாமி, எஸ்.முரளி, கதிரேசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.





