ராசிபுரத்தில் அமைந்துள்ள பொன்வரதராஜப் பெருமாள் திருக்கோயில், குடமுழுக்கு விழா நடந்து முடிந்து மண்டல பூஜைகள்கள் நாள்தோறும் நடைபெற்று. இதனையடுத்து அண்மையில் நடைபெற்ற மண்டல பூஜை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆண்டாள் திருக்கல்யாணம் என்ற தலைப்பில் பாவை நிருத்யாலயா மாணவியரின் நடன நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் முன்னிலை வகித்தார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் ராசிபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கவிதா சங்கருக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

பிறகு ஆண்டாள் திருக்கல்யாணம் நடன நாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவன் மற்றும் முருகனை போற்றும் வகையில் பாவை கல்லூரி மாணவ, மாணவியாின் நாட்டிய நடனங்களும் இடம் பெற்றன.

தொடர்ந்து விழாவில் பேசிய, ஆடிட்டர் என்.வி.நடராஜன், பாவை நிருத்யாலயா மாணவிகள் வழங்கிய ஆண்டாள் திருக்கல்யாணம் நடன அரங்கேற்றம் பக்தி மற்றும் பாரம்பாியத்தின் அழகை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. பாவைக் கல்விக் குழுமம், தன் தனிப்பட்ட அடையாளத்தோடு சிறந்த பரதநாட்டிய கலை பண்பாட்டு மையமாக திகழ்கின்ற பாவை நிருத்யாலயா என்ற நடனப்பள்ளியை ஆரம்பித்து, மாணவியர்களை பரதத்தில் வல்லுநர்களாக உருவாக்கி வருகிறது. பெரு நகரங்களில் மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆங்கில பேச்சாற்றல், தலைமைப்பண்பும் கூடவே இசை, பாட்டு, நடனம், யோகா, கராத்தே மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றிற்கு பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் அனைத்து வாய்ப்புகளும் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் சதீஸ், முதல்வர் ரோஹித், தலைமையாசிரியை நிரஞ்சனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





