தமிழக அரசின் சுகாதாரத்துறையில் மருந்தாளுனராக பணியாற்றி பணி நிறைவு பெற்ற ஏ.ராஜூ-விற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பலரும் பங்கேற்று கெளரவித்து பாராட்டிப் பேசினர்.
ராசிபுரம் ரோட்டரி கிளப் ராயல், மக்கள் நீதி மய்யம்”, நம்மவர் தொழிற்சங்க பேரவை ஆகியவற்றின் சார்பில் அரசு பணி நிறைவு செய்த நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை மருந்தாளுனர் “A. ராஜு-விற்கான பாராட்டு விழா” ராசிபுரம் ராயல் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது . இதில் ராசிபுரம் ராயல் ரோட்டரி கிளப் தலைவர் M.பூபாலன் தலைமை வகித்தார். “ரோட்டரி மாவட்டம் முன்னாள் உதவி ஆளுநர் k. ரவி, மக்கள் நீதி மயயம் மாவட்ட பொருளாளர் S.மணி@ மாணிக்கவாசகம், நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில பொதுச் செயலாளர் V.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.”நம்மவர் தொழிற்சங்க பேரவையின் துணை ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பிறகு சுகாதாரத்துறையில் 33 வருட ம் மருந்தாளுனராகப் பணியாற்றி அரசு பணி நிறைவு செய்த தலைமை மருந்தாளுனர் ராஜு வை பாராட்டி ” தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்க முன்னாள்மாநில பொதுச் செயலாளரும், ஓய்வு பெற்ற மருந்து கிடங்கு அலுவலருமான P. செல்வமணி சிறப்பு அழைப்பாளராக” கலந்து கொண்டு மருத்துவ சேவைகள் குறித்துப் பேசினார்.
மதுரை “நம்மவர் தொழிற்சங்க பேரவை “மாநில ஒருங்கிணைப்பாளர் R.சொக்கர், ஏ.ராஜூவின் பொதுச்சேவைகள், ரத்ததானம், விழிப்புணர்வு முகாம்கள் குறித்துப் பேசினர்.
டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வி.பாலு, ரோட்டரி முன்னாள் உதவி ஆளுநர் கே.கே.வி.கிருஷ்ணமூர்த்தி, ஜேசிஐ ஸ்கேன் என்ஜினியர் சுரேந்திரன், டாக்டர் எஸ்.சதாசிவம், சி.நடராஜூ உள்ளிட்ட மக்கள் நீதி மைய்யத்தின் பொறுப்பாளர்கள், ரோட்டரி நிர்வாகிகள், நகர பிரிமுகர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.