நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் K.R.N.ராஜேஷ் குமார் எம்பி., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சித் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான M. K. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மேற்கு மண்டல பொறுப்பாளர் கரூர் மாவட்ட செயலாளர் V.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் முதல்வர் அவர்களின் திராவிடமாடல் நல்லாட்சி தொடரவும், திமுக அரசு 7வது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் ஒவ்வொருவரும் களப்பணி மேற்கொள்ள ஆலோசனை வழங்கி பேசினார்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.இராமலிங்கம், கே.பொன்னுசாமி, சட்டமன்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் நன்னியூர் ராஜேந்திரன், முனவர் ஜான், ரேகா பிரியதர்ஷினி, ஒன்றிய,நகர,பேரூர் செயலாளர்கள், மாநில,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சாா்பு அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.