Tuesday, May 20, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த தின ஆஞ்சநேயர் வழிபாடு

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த தின ஆஞ்சநேயர் வழிபாடு

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி 71-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் மாநில இணைச் செயலாளர் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் ஏற்பாட்டில் நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக செய்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தொண்டர்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த சிறப்பு வழிபாட்டில் கட்சி மகளிர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மருத்துவர் வெ.சரோஜா, கழக அமைப்புச் செயலாளர் சேவல் எஸ்.ராஜூ, பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் ராஹா சு.தமிழ்மணி, முன்னாள் அரசு வழக்கறிஞரும், டி.என்.பி.எஸ்.சி முன்னாள் உறுப்பினருமான ஏ.வி.பாலுசாமி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் முரளி பாலுசாமி உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!