Monday, February 16, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஆன்மிகம்சங்ககிரி மோரூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சங்ககிரி மோரூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சங்ககிரி அருகே மோரூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா மே மாதம் 4ம் தேதி ஞாயிற்று கிழமை நடைபெற்றது.

இக்கோவிலின் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு பல கோடி மதிப்பில் கோவில் புனரமைக்கப்பட்டன. மாரியம்மன், விநாயகர், பாட்டப்பன், சப்த கன்னிமார்கள் சிலைகள் நிறுவப்பட்டன, மே -2 காலை கணபதி பூஜையுடன் தொடங்கியது, அன்று மாலை பக்தர்கள் கல்வடங்கம் காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர், மே -3, கலசம் வைத்தல் மற்றும் மருந்து சாற்றி சிலைகள் நிறுவப்பட்டன. பின்பு சிவாச்சாரியார்களால் வேள்வி பூஜைகள் நடைபெற்றது. மே-4 ஞாயிறு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் ஊர் பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் மே -2 வெள்ளிக்கிழமை மாலை முதல் மே-4 ஞாயிக்கிழமை மதியம் வரை அன்னதானம் வழங்கப்பட்டது. 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!