Tuesday, May 20, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்நாமக்கல் மாவட்ட சீனியர் ஆண்கள் ஹாக்கி விளையாட்டு வீரர்கள் தேர்வு மே.5-ல் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட சீனியர் ஆண்கள் ஹாக்கி விளையாட்டு வீரர்கள் தேர்வு மே.5-ல் நடைபெறுகிறது.

மாநில ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளுக்கு சீனியர் ஆண்கள் விளையாட்டு வீரர்கள் தேர்வு மே.5-ல் ராசிபுரம் பாவைப் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் என நாமக்கல் மாவட்ட ஹாக்கி யூனிட் தலைவர் கே.நடராஜன், துணைத் தலைவர் என்.சந்தானராஜா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வருகிற மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சார்பாக தூத்துக்குடியில் அனைத்து மாவட்டங்களுக்கு இடையேயான, மாநில அளவிலான ஆண்களுக்கான சீனியர் ஹாக்கி விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கு நாமக்கல் மாவட்ட அணிக்காக விளையாட, நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி காலை 9 மணி அளவில் பாவை பொறியியல் கல்லூரியில் நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும், அல்லது நாமக்கல் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு கல்லூரிகளில் அல்லது பள்ளிகளில் பயில்பவராக இருக்க வேண்டும் , வயது வரம்பு கிடையாது . கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் கண்டிப்பாக தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரவேண்டும், மேலும் விபரங்களுக்கு 98422 94740, 99655 33888, 97871 43345. தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!