Friday, April 18, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்நீர் மோர் வழங்கும் விழா

நீர் மோர் வழங்கும் விழா

சேலம் அரசு கலைக் கல்லூரி முன்பாக தேசிய சேவா சமிதி மற்றும் ஸ்டுடென்ட் பார் சேவா அமைப்பின் சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் தேசிய சேவா சமிதி தலைவர் ஹரிஹரகோபால் அவர்கள் தலைமை வகித்தார். ஸ்டுடென்ட் பார் சேவா அமைப்பின் பொறுப்பாளர் பாலமுருகன் வரவேற்புரை ஆற்றினார்.

யோகி நாராயணா டிரஸ்ட் நிர்வாகி டாக்டர் ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்வியாளர் பிரணவகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார் .நிகழ்ச்சியில் அகில பாரதிய வித்யார்த்தி பர்ஷித் இயக்கத்தின் நிர்வாகிகள் ராமு, தீபக், அருண் ,பிரதீப்,நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோடை காலம் முழுவதும் அரசு கலைக் கல்லூரி முன்பாக மாணவ மாணவிகளுக்கு நீர்மோர் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!