Friday, April 18, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்வேதாத்ரி மகரிஷி - நினைவு நாள்

வேதாத்ரி மகரிஷி – நினைவு நாள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் வேதாத்திரி மகரிஷி அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு நாள் குமாரபாளையம் J.K.K. நடராஜா நகரில் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்விற்கு கிளைச் சங்க பொறுப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார், குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் J.R.N.தங்கராஜ், ஆசிரியை சௌந்தரம், காஞ்சனா, கு.பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் J.R.N. தங்கராஜ் அவர்கள் பேசும் பொழுது,

வேதாத்திரி மகரிஷி அவர்கள் 18-வது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, அப்பொழுது அவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ்.கிருஷ்ணராவின் நட்பு கிடைக்க அவர் மூலமாக தியானம், யோகா போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார் என குறிப்பிட்டார். மேலும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது வாழ்க்கையின் குறிக்கோளாகிய முழுமையை உணரும் நோக்கத்தால் உந்தப்பட்டு சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகளை கற்று தேர்ச்சி பெற்றார். இது மட்டுமின்றி இரண்டாவது உலகப் போரின் போது முதலுதவி பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். 1957ல் மகரிஷி அவர்கள் உலக சமாதானம் என்னும் நூல் ஒன்றை வெளியிட்டார். இந்த பிரபஞ்சத்தை பற்றியும் மனித வாழ்க்கையை பற்றியும் தவநிலையில் தான் பெற்ற கருத்துக்களை பல கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் புத்தக வடிவங்களில் இந்த உலகிற்கு மகரிஷி அவர்கள் அளித்துள்ளார்கள். இதனை நாம் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அவர்கள் வாழ்வில் மேம்பட நாம் அனைவரும் உதவ வேண்டும் என குறிப்பிட்டு பேசினார்.

விழாவில் செங்குந்த மகாஜன சங்க மாவட்ட செயலாளர் K.P.சீனிவாசன், நகர பொருளாளர் S.பிரபு, கிளைச்சங்க நிர்வாகிகள் பிரபாத் J.N.மாதேஸ்வரன், சித்தலிங்கம், கணேசன், வேலுச்சாமி, மைக்ரோடெக் சீனிவாசன் , கதிர்வேல் மற்றும் கிளைச்சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வேதாத்ரி மகரிஷி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!