Friday, April 18, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ராசிபுரம் நகர 16 வது வார்டு...

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ராசிபுரம் நகர 16 வது வார்டு திமுக சார்பில் சிறப்பு பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழக முதல்வர் கழகத் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவிகள், மற்றும் ஜல்லிக்கட்டு போட்டி போன்றவை நடைபெற்றது.

இந்நிலையில் ராசிபுரம் நகர 16வது வார்டு திமுக சார்பில் சிறப்பு பல் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
இதில் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிறப்பாக மருத்துவம் பார்க்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

ராசிபுரம் நகர செயலாளர் என்.ஆர். சங்கர் அவர்களின் ஆலோசனை பெயரில் நடைபெற்ற இந்த சிறப்பு பல் மருத்துவ முகாமில் பலர் பயனடைந்தனர்.

மேலும் இந்த பல் மருத்துவ முகாமில் டாக்டர் சௌந்தர்யா அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த சிறப்பு முகாமை பா.பூபதி, ராஜராஜ சோழன், ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் இதில் பழனியப்பன், அன்பழகன், சுரேஷ், சண்முகம் மற்றும் 16. வது வார்டு நகர மன்ற உறுப்பினர் லலிதா மேலும் காங்கிரஸ் நிர்வாகி பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!