ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை அன்று விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. காலை 10.00 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது. பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி ஏ. மனுஸ்ரீ வரவேற்புரை ஆற்றினார். மாண்டி ஐஏ மாணவன் கௌதம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி ப்ரீத்தி விருதுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி சிறப்புரை வழங்கினர்.

பள்ளியில் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி, கையெழுத்து போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, வெளிப்புற போட்டிகள், ஆகியவற்றில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற சுமார் 300 மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது. மாண்டி ஏஐ மாணவன் N.ஆருரன் நன்றியுரை கூறினார். இவ்விழாவில் பள்ளியின் இயக்குநர்கள், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்; கலந்து கொண்டனர்.