குமாரபாளையம், ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி துறையின் சார்பாக, இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நேற்று துவங்கியது.
குமாரபாளையம், ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி துறையின் சார்பாக, இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இத்தேர்வில் 35க்கு மேற்பட்ட தட்டச்சு பயிற்சி நிறுவனங்களில் இருந்து, 1455 மாணவ, மாணவிகள் தட்டச்சு தேர்வில் பங்கேற்க்கின்றன்ர். இதில் இளநிலை ஆங்கிலம் 592, இளநிலை தமிழ் 351, முதுநிலை ஆங்கிலம் 317 மற்றும் முதுநிலை தமிழ் 194 மாணவ மாணவியர்கள் ஆவர். மொத்தம் மாணவர்கள் – 299, மாணவியர்கள் – 1156. மாணவ மாணவியர்கள் வெற்றி பெற, தேர்வு முதன்மை கண்காணிப்பாளர், ஸ்ரீ ராகவேந்திரா கல்வி நிறுவனங்களின் முதல்வர் விஜயகுமார் மற்றும் தேர்வு துணை கண்காணிப்பாளர் முத்துவேலம்மை ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.