ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் மாசி மகா வராத்திரி திருவிழாவையொட்டி 8-ம் நாள் கட்டளையாக சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடுகள், சுவாமி திருவீதி உலா சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோவிலின் ஆண்டு மாசி மகாசிவராத்திரி விழா கொடியேற்றததுடன் பிப்.15-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மார்ச் 3-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் பல்வேறு கட்டளைதாரர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனம், யானை வாகனம், கிளி வாகனம், புலி வாகனம்,குதிரை வாகனம், காமதேனு வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா அழைத்து வரப்படுறார்.

இதனை தொடர்ந்து 8-ம் நாள் நிகழ்ச்சியாக என்.பாலசுப்பிரமணியம் குடும்பத்தினரின் கட்டளை சனிக்கிழமை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமர்தம், பன்னீர, தேன், திருமஞ்சனம்,சந்தனம், மஞ்சள், குங்குமம் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து பக்தர்கள் அன்னதானம் நடைபெற்றது.பின்னர் மாலை சுவாமி திருவீதி உலா அழைத்துச் செல்லப்பட்டார். கச்சேரி வீதி,பழைய பஸ் நிலையம், கவரைத்தெரு, கடைவீதி வழியாக மீண்டும் சுவாமி கோவிலுக்கு சென்றடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பிப்ரவரி 26 ஆம் தேதி அம்மன் சக்தி அழைத்தல், அக்னிகுண்டம் பற்றவைத்தல், சுவாமி ஊஞ்சலாடுதல், பந்த பலியிடுதல், பூ மாலை உள்ளிட்ட நிகழ்வுகளும், பிப். 27 காலை தீ மிதித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து பிப். 28 ஆம் தேதி சுவாமி ரத ஊர்வலம் நடத்தப்படுகிறது. முக்கிய நிகழ்வான மயான கொள்ளை பூஜை மார்ச் 1ஆம் தேதி நடைபெறும். மார்ச் 2-ல் சத்தாபரணம் மார்ச் 3-ல் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இதனை தொடர்ந்து திருக்கோவில் சேவா சங்கத்தினர், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.