குமாரபாளையம், பவானி இடையே பழைய காவேரி பாலம் 1849ல் கட்டப்பட்டது. 175 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த பாலத்தில் 1998 முதல் கன ரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. காவிரியில் வெள்ளம் வந்துவிட்டால் எந்த வாகனமும் அனுமதிப்பது இல்லை. இத உறுதி தன்மை குறித்து நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார், கோட்ட பொறியாளர் குணா, உதவி கோட்ட பொறியாளர்கள் நடராஜம், மோகன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். பாலத்தில் உள்ள 28 தூண்களும் உறுதியாக உள்ளது என்றும், தற்போதுள்ள போக்குவரத்து முறையே தொடரட்டும் என்றும் கூறி சென்றனர். காவேரி நகர் புதிய காவேரி பாலத்தை கூட ஆய்வு செய்தனர்.