ராசிபுரம், தேங்கல்பாளையம் பிரிவில் உள்ள வித்யா நிகேதன் இண்டல் பப்ளிக் பள்ளியில், ஞாயிற்றுக்கிழமை அன்று மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாநில அளவிலான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, மற்றும் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டன.

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த முப்பெரும் கலைப்போட்டியில் நாமக்கல் , சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களின் மொழித்திறனை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் ராசிபுரம், வித்யா நிகேதன் பள்ளிகளின் தலைவர் P. நடராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுக்களையும் பரிசுகளையும் வழங்கினார்.
விழா ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் (Royal king Chess Academy, Rasipuram) அவர்கள் விழாவிற்கான வரவேற்றுப் பேசினார். பள்ளியின் முதல்வர் மா. உமா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தலைவர் P. நடராஜன் தலைமை வகித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இது போன்ற போட்டிகளில் பங்கேற்பதின் முக்கியத்துவத்தையும், நன்மைகளையும் எடுத்துரைத்து ஊக்கப்படுத்தினார். பள்ளியின் மூத்த ஆசிரியர் A. ஆஷிஃபா பானு இவ்விழாவினை தொகுத்து வழங்கினார் . பள்ளியின் பிரகதீஸ்வரி நன்றி தெரிவித்தார்.