ஜேகாம் எல் ராசிபுரம் 1.0 புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ராசிபுரம் ராசி இன்டர்நேஷனல் பள்ளி உள் அரங்கில் நடைபெற்றது. ஜேகாம் எல் ராசிபுரம் அமைப்பின் புதிய தலைவராக எஸ்.சேகர், பயிற்சியாளராக பி.பூபதி, துணைத் தலைவராக பிரபுராஜா, செயலாளராக என்.டி.ராஜ்கமல், பொருளாளராக என்.கணபதி சுப்ரமணியம், இயக்குனர்களாக கே.சதீஸ்குமார், எம்.சரஸ்வதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பதவியேற்பு விழாவில் ஜேகாம் தலைவர் எஸ்.சேகர் தலைமை வகித்தார்.

புதிய நிர்வாகிகளுக்கு ஜேசிஐ அமைப்பின் முன்னாள் தேசிய பயிற்சியாளர் ஜி.சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புதிய நிர்வாகிகளுக்கு பதவியேற்பு செய்து வைத்துப் பேசினார். பின்னர் ஜேகாம் சார்பில் பங்கேற்றவர்களுக்கு வணிக நிறுவனத்தை திறம்பட நடத்துவது எப்படி, நிதி மேலாண்மை, நிர்வாக மேலாண்மை, நிறுவன மேலாண்மை போன்ற வணிக மேம்பாட்டு பயிற்சியளித்தார்.

இதில் ஜேசிஐ அமைப்பின் சாசனத் தலைவர் டி.சசிரேகா, தலைவர் பி.மணிமேகலை, முன்னாள் தலைவர்கள் பி.சுகன்யா, ஆர்.சதீஸ்குமார், எம்.தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.