ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் சாலையில் வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் முடிவுற்றதை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் கதிரேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலைத்துறை ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளான வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் சாலை சந்திப்பு அகலப்படுத்துதல், மையத் தடுப்பான் அமைத்தல் போன்றவற்றிற்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட சேலம் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர் கதிரேஷ் சாலையின் நீளம், அகலம், கனம் குறித்தும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவிக் கோட்டப்பொறியாளர் தமிழரசி, உதவிப் பொறியாளர் கார்த்தி, ராசிபுரம் கட்டுமானம், பராமரிப்பு உதவிக் கோட்டப்பொறியாளர் ஜெகதீஸ்குமார், உதவிப் பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.2 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி- கோட்டப்பொறியாளர் ஆய்வு
RELATED ARTICLES