சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 08.01.2025 அன்று கல்லூரியில் செயல்பட்டு வரும் ரெட் ரிப்பன் கிளப், உட்புகார் குழு, ரோட்ராக்ட் கிளப் மற்றும் ராசிபுரம் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. போட்டியை ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம். முருகானந்தன், கல்லூரியின் முதல்வர் முனைவர் தி.பாரதி, பேளுக்குறிச்சி காவல் ஆய்வாளர் இ. ஆனந்தகுமார், மூவரும் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் திரு. M.முருகானந்தன் மற்றும் சங்க பொறுப்பாளர்கள், கே எஸ் கருணாகரன் பன்னீர்செல்வம், அடுத்தாண்டு செயலர் எ.மஸ்தான், மூத்த உறுப்பினர் டி.பி. வெங்கடாஜலபதி, மற்றும் பேளுக்குறிச்சி காவல் ஆய்வாளர் திரு. E. ஆனந்தகுமார் அவர்கள், ஆகிய அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக போதைப்பொருள் தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி இயக்குனர் முனைவர் மொ.ரவி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இப்போட்டிக்கான முன்னேற்பாடுகளை இணை பேராசிரியர் முனைவர் வா. செந்தில்குமரன் அவர்கள், ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் ச. ராமநாதன், கல்லூரி ரோட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஞ. கலையரசி ஆகியோர் செய்து இருந்தனர்.
விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் கல்லூரியில் பயிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியின் நிறைவாக வெற்றி பெற்ற முதல் 10 மாணவர்கள், 10 மாணவியர்களுக்கு பரிசு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஜூஸ் மற்றும் பிஸ்கட் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் மூலமாக வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் டீம் ஆனந்தம் 24-25 சார்பில் மனமார்ந்த நன்றிகள்! 🙏