Saturday, February 15, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 1062 கழக தொண்டர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது...

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 1062 கழக தொண்டர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட செயலர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., தகவல்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கடந்த 6 காலத்தில் மறைந்த 1062 கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு கலைஞர் குடும்ப நலநிதியாக
ரூ.1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என வெண்ணந்தூரில் நடைப்பெற்ற கட்சியின் கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி.,தெரிவித்துள்ளார்.

வெண்ணந்தூர் ஒன்றியம், அத்தனூர் பேரூர், வெண்ணந்தூர் பேரூர் ஆகிய பகுதிகளில் கடந்த மார்ச் 2024 முதல் தற்பொழுது வரை மறைந்த 158 கழக உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு திராவிட சிந்தனை எழுத்தாளர் மதிமாறன் முன்னிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் ஆர்எம்.துரைசாமி,பேரூர் கழக செயலாளர் கண்ணன்,மாவட்ட அயலக அணி அமைப்பாளர் விஜயபாஸ்கர், சார்பு அணி அமைப்பாளர்கள் சித்தார்த், கிருபாகரன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இதுவரை வழங்கப்பட்ட கழக கலைஞர்குடும்ப நலநிதி மொத்தம் 1062:

இந்த நிகழ்வில் பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.ராஜேஸ்குமார் எம்பி்., பேசுகையில், கடந்த 6 மாதத்தில் மட்டும் மறைந்த கழக உறுப்பினர்கள் 1062பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் கலைஞர் குடும்ப நல நிதியாக வழங்கப்பட்டுள்ளது என்றார். நிதி வழங்கிய விவரம்:

நாமக்கல் கிழக்கு நகரம் 36, நாமக்கல் மேற்கு நகரம் 25, நாமக்கல் தெற்கு நகரம் 32, நாமக்கல் ஒன்றியம் 49, மோகனூர் ஒன்றியம் 107,புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம் 47, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியம் 41, மோகனூர் பேரூர் 28, சேந்தமங்கலம் ஒன்றியம் 104, கொல்லிமலை ஒன்றியம் 29, எருமப்பட்டி ஒன்றியம் 70, சேந்தமங்கலம் பேரூர் 39, எருமப்பட்டி பேரூர் 3, சிராப்பள்ளி பேரூர் 20, நாமகிரிப்பேட்டை பேரூர் 61, காளப்பநாயக்கன்பட்டி பேரூர் 29, ராசிபுரம் நகரம் 27, ராசிபுரம் ஒன்றியம் 48, வெண்ணந்தூர் ஒன்றியம் 102, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் 93, அத்தனூர் பேரூர் 21, வெண்ணந்தூர் பேரூர் 35, பட்டணம் பேரூர் 4, பிள்ளாநல்லூர் பேரூர் 12.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!