ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் வேளாங்கண்ணி ஆண்டு திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்டு 29 முதல் செப்.8 வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவை தொடர்ந்து பயணிகளின் கூடுதல் நெரிசலைக் கருத்தில் கொண்டு, வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என சேலம் கேட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
ரயில் எண்.07361 வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் 2024 ஆகஸ்ட் 27, செப்.02 மற்றும் செப்.06 (3 சேவைகள்) ஆகிய நாட்களில் வாஸ்கோடகாமாவில் இருந்து 21.55 மணிக்குப் புறப்பட்டு மூன்றாம் நாள் மதியம் 01.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
வாஸ்கோடகாமா சிறப்பு ரயில் 2024 ஆகஸ்ட் 29, செப்.04 மற்றும் செப்.08 (3 சேவைகள்) ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து 23.55 மணிக்குப் புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 00.15 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.பெட்டிகள்: ஏசி இரு அடுக்கு – 2, ஏசி மூன்றடுக்கு 4, ஸ்லீப்பர் வகுப்பு 10, பொது இரண்டாம் வகுப்பு 2 & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் – 2 கோச்சுகள்.
நிறுத்தங்கள்: மட்கான், சன்வோர்டெம், குலேம், கேஸில் ராக், லோண்டா, தார்வாட், ஹூப்பள்ளி, ஹாவேரி, ஹரிஹர், தாவங்கேரே, சிக்ஜாஜூர், பிரூர், அரசிகெரே, தும்கூர், SMVT பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், ஒயிட்ஃபீல்ட், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்.
சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நேரங்கள்: ரயில் எண்.07361 வாஸ்கோடகாமா வேளாங்கண்ணி சிறப்பு ரயில்: (28 ஆகஸ்ட், செப்.03 & செப்.07 2024 அன்று) சேலம் 17.20/17.30 மணி; நாமக்கல் – 18.19/18.20 மணி; கரூர் – 18.58/ 19.00 மணி.
ரயில் எண்.07362 வேளாங்கண்ணி – வாஸ்கோடகாமா சிறப்பு ரயில்: (30 ஆகஸ்ட், செப்.05 & செப்.09 2024) கரூர் 04.23 / 04.25 மணி; நாமக்கல்05.09 / 05.10 மணி; சேலம் 06.05/06.15 மணி. இத் தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.