Thursday, March 13, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்மத்திய பட்ஜெட் ஏமாற்றம் - நாமக்கல் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் – நாமக்கல் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

நாமக்கல் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் பட்ஜெட் குறித்து தெரிவித்துள்ளதாவது: மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மற்றும் செல்போன், அதன் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி வரியினை குறைத்ததையும், முத்ரா கடன் வரம்பினை 10 லட்சத்தில் இருந்து 20 இலட்சமாக உயர்த்தியதையும், 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தையும் வரவேற்கலாம்.

எனினும், இந்த மத்திய பட்ஜெட்டில் அத்தியாவசிய உணவு பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும், 5, 12, 18, 28 சதவீதம் என 4 அடுக்கு நிலையில் உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை ஒன்று அல்லது இரண்டடுக்காக குறைக்க வேண்டும், அத்தியாவசியப் உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி விதிப்பினை நீக்க வேண்டும் உள்ளிட்ட வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து சலுகை வழங்காதது பெரும் ஏமாற்றம் தருகிறது. நிறைய எதிர்பார்ப்புடன் காத்திருந்த வணிகர்களை வழக்கம்போல இந்த முறையும் மத்திய பட்ஜெட் ஏமாற்றிவிட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!