ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலா லயோலா கலை அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் – லயோலா கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான இணைந்து வேலை வாய்ப்பு முகாமினை நடத்தியது. முகாம் துவக்க விழாவில், லயோலா கல்லூரியின் தலைவர் டோமினிக் ஜெயக்குமார், செயலர் டேனிஸ் பொன்னைய்யா, முதல்வர் ஜோஸ்பின் டெய்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நாமக்கல்,கரூர் மாவட்டத் திட்ட மேலாளர் டாரிஷ் பங்கேற்றுப் நான் முதல்வன் திட்டத்தின் அரசு செயல்படுத்தும் வரும் மாணவ மாணவியர்களுக்கு திறன் வளர்ப்பு செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் நாமக்கல், சேலம் மாவட்டத்தின் 60 கல்லூரிகளிலிருந்து, 250 கிராமப்புற மாணவ-மாணவியர்கள் பங்கேற்றனர். முகாமில் 19 நிறுவனங்கள் கல்லூரி வளாகத்தில் நேர்காணலை நடத்தி மாணவர்களை வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்தனர். இதில் 90 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றனர். மேலும் 75 மாணவர்கள் அடுத்த சுற்று நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர். கல்லூரியின் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சதிஷ், வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் விமல்ஆன்ட்ரூ நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்தனர்.