நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் கூட்டம் ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரபு, மாவட்ட செயலர் ஜெகதீஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக மத்திய மாநில துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் சங்க கொடியேற்றி வைத்தார். சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வும் இதில் நடத்தப்பட்டது. மேலும் சபரிமலை மகரவிளக்கு காலங்களில் உயிர்காக்கும் சேவையில் பணியாற்றிய பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு விழாவில் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி பாராட்டினர். புதிய கிளைகளுக்கு சான்றிதழ்கள் வழங்குதல், சிங்களாந்தபுரம் கிளையின் வெள்ளி விழா, சங்கத்தின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பாராட்டு விழா ஆகியவை நடத்தப்பட்டன. பின்னர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட நாமக்கல் மாவட்ட சங்கத் தலைவர் பிரபு, செயலாளர் ஜெகதீஷ், பொருளாளர் செங்கோட்டையன், உட்பட பலருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் ஸ்ரீதர், பல ஆண்டுகளாக அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் கோவிலில் அன்னதானம், கல்வி சேவை செய்து வந்த நிலையில், கோவில் நிர்வாகவே இதனை மேற்கொள்ளும் வகையில் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வென்று மீண்டும் சேவா சங்கம் இப்பணியை மேற்கொள்ளும் என்றார்.