கொல்லிமலை வாழ் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொல்லிமலை பழங்குடியின திட்ட அலுவலகம் முன்பாக ஜூலை.2-ல் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் பழங்குடியின் மலை வாழ் மக்கள் சங்கத்தின் ஒன்றிய தலைவர் S.K.மாணிக்கம் தலைமை வைத்தார்.
ஆர்ப்பாட்டதில் V.K.வெள்ளைச்சாமி, K.V.ராஜ், E.பன்னீர்செல்வம், A.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகத்தனர்.

ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து இந்திய தொழிர் சங்கதின் மாவட்டதலைவர் எம் அசோகன் பேசினார். போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.T.கண்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கராஜ், மாவட்ட செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோர் பேசினர்.
போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய குழு உறுப்பினர்கள் S.C.சிவனேசன், V.C.மணி, S.துரைசாமி, S.பழனிசாமி, A.சிவராஜ், V.பழனிசாமி, E.சின்னப்பையன், C.ரேவதி, மணி(எ)சிற்றரசு, S.ராஜாமணி, C.பொன்னம்மாள், K.வெள்ளையன், S.சேகரன், V.C.பழனிசாமி, V.செல்வகுமரேசன், ராஜேந்திரன், உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கொல்லிமலையின் கோரிக்கைகளான இன மக்களுக்கு தடையின்றி ஜாதி சான்றிதழ் (ST) காலதாமதமின்றி உடனே வழங்க வேண்டும்.
கொல்லிமலையில் செயல்பட்டு வரும் தோட்டக்கலைத்துறை வேளாண்துறை ஸ்பைசிஸ் போர்டு மற்றும் காபி போர்டு பகுதிகளில் நடைபெற்று வரக்கூடிய இடைத்தரர்களின் தலையீட்டை தடுத்து நிறுத்தி உண்மையான பயனாளிகளுக்கு அரசு மானியம் கிடைத்திட உதவி செய்ய வேண்டும்.
2006 வன உரிமைச்சட்டப்படி அனுபவ நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும். ரீ சர்வே குளறுபடிகளை சரி செய்த பின்னர் கணினியில் பதிவேற்றம் சரி செய்ய வேண்டும். வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடுகளுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தி உடனே வழங்கிட வேண்டும்.

கொல்லிமலையில் உள்ள அனைத்து (VAO) கிராம நிர்வாக அலுவலர்களும், தங்களின் கிராமங்களில் தங்கி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து கிராமங்களுக்கும் 100 நாள் வேலையை முறையாக வழங்கிட வேண்டும்.கொல்லிமலை அரசு மருத்துவமனைக்கு நவீன மருத்துவ கருவிகள் வழங்கி போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும். கொல்லிமலையில் செம்மேடு முதல் செம்மேடு வரை செல்லக்கூடிய வகையில் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர்வசதி வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடந்தது.